ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு கடைகள் இடித்து அகற்றம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 December 2024

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு கடைகள் இடித்து அகற்றம்



ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெருந்துறை செல்லும் சாலையில் அமைந்துள்ள கீழ்த்திண்டல் பகுதியில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அளவீடு செய்தபோது அரசுக்குச் சொந்தமான 20 சென்ட் இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து

அவர்களிடம் எடுத்துக் கூறியும்

அவர்கள் ஆக்கிரமிப்புகளை

காலிசெய்ய மறுத்துவந்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு

நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த

நிலையில் இடத்தை மீட்டு

வருவாய்த்துறைக்கு ஒப்படைக்க

வேண்டும் என நீதிமன்றம்

உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து

அவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை

அகற்ற 7 மாத காலஅவகாசம்

கொடுக்கப்பட்டது. ஆனால்

அவர்கள் ஆக்கிரமிப்புகளை

காலிசெய்ய மறுத்துவந்தனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தை

அகற்ற வருவாய்த்துறையினர்

முடிவுசெய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.


No comments:

Post a Comment