மாணவர்களுக்கு ரூ. 87 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கல் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 December 2024

மாணவர்களுக்கு ரூ. 87 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கல் :



செங்குந்தர் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு ரூ.87 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்.

ஈரோடு செங்குந்தர் பவுண்டேஷன் சார்பில் மாணவ மாணவிகளுக்கு ரூ.87 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.


ஈரோடு செங்குந்தர் பவுண்டேஷன் சார்பில் மூன்றாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஈரோடு முத்து மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு செங்குந்தர் பவுண்டேஷன் தலைவர் மாசிலாமணி தலைமை வகித்தார், செயலாளர் கலைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். விழாவில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவ படிப்பு என மாணவ மாணவியர்கள் 1020 பேருக்கு ரூ.87 லட்சம் உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.


மேலும் இவ்விழாவில்

தொழிலதிபர் பாலுசாமி, சண்முகா சால்ட் ராஜமாணிக்கம், சூர்யா இன்ஜினியரிங் ஆண்டவர் ராமசாமி, செங்குந்தர் கல்வி கழக செயலாளர் சிவானந்தம், லட்சுமி ஏஜென்சி இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் செங்குந்தர் பவுண்டேஷன் பொருளாளர் அங்கமுத்து, உதவித் தலைவர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், இணைச் செயலாளர்கள் புஷ்பராஜ், சிதம்பரசரவணன், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிவானந்தம், முருகானந்தம், சதாசிவம், ராஜமாணிக்கம், இளங்கோ மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment