பொது இடங்களில் குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 December 2024

பொது இடங்களில் குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்



ஈரோடு மாநகராட்சி குப்பை இல்லாத மாநகரம் என்ற நிலையை அடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் மாநகராட்சி தூய்மை வாகனங்கள் சென்று வருகின்றன. தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பொது இடங்கள், மழை நீர் வடிகால்கள், ஓடைகள், நீர் நிலைகளிலும் குப்பைகளை போடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு உடனடி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் கார்த்திக்கேயன் தலைமையில் சுகாதார அதிகாரிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், 3-ம் மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால், நீர் நிலை மற்றும் பொது இடங்களில் குப்பை போட்ட 22 பேருக்கு சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் தலைமையிலான அதிகாரிகள் உடனடி அபராதம் விதித்துள்ளனர். சுமார் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா.

No comments:

Post a Comment