புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 December 2024

புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் :



ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் பழைமை வாய்ந்த புனித அமல அன்னை ஆலயம்(சர்ச்) உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 1) நடைபெற்றது. இதில், பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு திருப்பலி(பூஜை) நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 8ம் தேதி தேர்த்திருவிழா துவங்குகிறது.


அன்றைய தினம் காலை திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு, வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ. கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment