தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 December 2024

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் முத்துசாமி


தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ஈரோட்டில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமியின் முகாம் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் சு. முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி. செல்வராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment