விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாக கூறி 217 பவுன் நகை-ரூ. 89 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது
வங்கியில் விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்தவர்களிடம் 217 பவுன் நகை மற்றும் ரூ. 89 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வேலமரத்தூரை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (35), கூலி தொழிலாளி.
இவர், அந்தியூர், பவானி மற்றும்
சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மகளிர்
சுய உதவிக்குழுக்களை சார்ந்த
பெண்களிடம் வங்கியில் (நபார்டு
வங்கி) விவசாய கடன் மானியத்துடன்
வாங்கி தருவதாகவும், அதற்கு
குறைந்த வட்டி என்றும் ஆசை
வார்த்தை கூறியுள்ளார். இதனை
நம்பி அந்தியூர் புதுமேட்டூர் பகுதியை
சேர்ந்த ரமேஷ்குமார் மனைவி சசிகலா
(35), கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி
மாதம் 1ம் தேதி விவசாய கடன்
பெறுவதற்காக 12 பவுன் நகையை
கருணாமூர்த்தியிடம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து கருணாமூர்த்தியே விவசாய கடன் கிடைத்துவிட்டதாக கூறி குறிப்பிட்ட தொகையை சசிகலாவிடம் வழங்கவில்லை.
மேலும், கருணாமூர்த்தி அவருக்கு அவசர தேவைக்கு பணம் தேவை எனவும், அதற்கு வங்கி வட்டியை விட கூடுதலாக தருவதாக சசிகலாவுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி சசிகலா ரூ. 9 லட்சம் ரொக்கத்தை கருணாமூர்த்தியிடம் அளித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment