மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் அஸ்திக்கு ஈரோட்டில் அஞ்சலி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 14ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, அவரின் இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் சொந்த ஊரான ஈரோட்டில் பழைய ரயில் நிலையம் பகுதியில் உள்ள அவரது பூர்விக இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் தாய் தந்தையின் கல்லறை மற்றும் மகன் திருமகன் ஈவெரா-வின் கல்லறை ஆகியவற்றின் அருகே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரின் அஸ்தியை காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் இருந்து ஈரோடுக்கு கொண்டு வந்து அக் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment