காரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவர் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 December 2024

காரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவர் :



அந்தியூர் பெம்மன்பட்டியை சேர்ந்த ஒரு பெண் வயது (40). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இவர் ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் அந்தியூர் திரும்பினார். அங்கிருந்து கிராமத்துக்கு செல்ல பஸ் இல்லாததால் இவர் வாடகை காரில் ஏறி சென்றார். காரில் சென்றபோது இருட்டான இடத்தில் நிறுத்தினார் கார் டிரைவர் அலாவுதீன். பிறகு அலாவுதீன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் சத்தமிடவே அங்கேயே இறக்கி விட்டுவிட்டு காரை ஓட்டி சென்று விட்டார் அலாவுதீன். இதுகுறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அலாவுதீன் போலீசில் நேற்று காலை சரணடைந்தார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment