ஈரோட்டில் நடைபெற்ற மங்கள வேல் யாத்திரை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 December 2024

ஈரோட்டில் நடைபெற்ற மங்கள வேல் யாத்திரை :


ஈரோட்டில் நடைபெற்ற மங்கள வேல் யாத்திரை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரவச கோஷத்துடன் முருகவேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


இந்து அன்னையர் முன்னணி சார்பில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகனின் திருத்தலங்களான சென்னிமலை, சிவன்மலை, பழனிமலை, வட்டமலை, மருதமலை, கதிர்மலை மற்றும் பச்சமலை ஆகிய 7 கோவில்களல் உள்ள கருவறையில், முருகப்பெருமானின் மங்கள வேலை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


அதனை தொடர்ந்து, அந்த முருகவேலை மக்கள் நேரிடியாக வழிபடும் வகையில், ஒவ்வொரு பகுதியாக யாத்திரை எடுத்துவரப்படுகிறது. இந்த யாத்திரையானது ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதிக்கு வந்த போது, முருகனே போற்றி என்ற பரவச கோஷத்துடன் வரவேற்ற பக்தர்கள், பின்பு முருகனின் மங்கள வேலுக்கு தங்களது திருக்கரங்களால், பால், சந்தனம், இளநீர், பன்னீர் என பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment