ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வழிகாட்டுதலோடு பாசிசத்தை ஒழிப்போம், பாரதத்தை காப்போம் என்ற முழக்கத்தோடு உங்கள் இல்லம் தேடி நாங்கள் என்ற நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி கொடுமுடி பேரூராட்சியில் இருந்து தொடங்கியது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய
ஜனதா அரசின் மக்கள் விரோத
போக்கை கண்டித்து பாசிசத்தை
ஒழிப்போம் பாரதத்தைக் காப்போம்
என்ற முழக்கத்தோடு உங்கள் இல்லம்
தேடி நாங்கள் என்று காங்கிரஸ்
பேரியக்கத்தின் நிர்வாகிகள்
இல்லத்திற்கு நேரடியாக சென்று
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி
குறித்தும் உறுப்பினர் சேர்க்கை
குறித்தும் கிராம காங்கிரஸ்
கமிட்டி நிர்வாகிகள் பட்டியல்
தயாரிப்பது குறித்தும் விரிவாக
விவாதிக்கப்பட்டது.
மேலும் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளையும் மனுவாக எழுதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெருந்துறையில் வருகிற 22ஆம் தேதி நிறைவு செய்ய இருந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ, உடல் நலக்குறைவால் இறந்ததை ஒட்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment