ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்? - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 December 2024

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்?


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2-வது முறையாக இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒருவாரத்திற்குள் கிழக்குத்தொகுதி காலியானதாக முறைப்படி சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிடும். இதற்கான கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து 6 மாதத்திற்குள் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி.

No comments:

Post a Comment