ரோட்டில் கொட்டப்பட்ட மாத்திரைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 December 2024

ரோட்டில் கொட்டப்பட்ட மாத்திரைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி :



ஈரோட்டில் அரசு மருத்துவமனை மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டுக் கிடக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகள் என்பதும், காலாவதியாகாமல் மக்களுக்கு வழங்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசு மாத்திரைகள் கொட்டி கிடப்பதால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு தில்லை நகர், தெப்பக்குளம் வீதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடக்கின்றன. இந்த மாத்திரைகள் அனைத்தும் 2025-ஆம் ஆண்டு வரை காலஅவகாசம் உள்ளவையாகும்.


பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய நிலையில் உள்ள இந்த மாத்திரைகள் ஏன் ரோட்டில் வீசப்பட்டது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருத்தம் தெரிவிப்பதுடன், தலைவலிக்கு தனியார் மருந்துக் கடைகளில் மாத்திரை கேட்டால் குறைந்தது ரூ. 10 இல்லாமல் மாத்திரைகள் கொடுப்பதில்லை.


தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல கோடி ரூபாய் மருத்துவத் துறைக்கு ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு நோய் வராமல் காக்க மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சமூக விரோதிகள் யாரோ நோயாளிகள் பயன்படுத்தும் நல்ல மாத்திரைகளை சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனர். இப்பகுதியில் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான மாத்திரைகள் கொட்டப்பட்டு, அவை குவியலாக கிடக்கின்றன. பொதுமக்கள் இது குறித்து பொதுசுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுக்கா.

No comments:

Post a Comment