நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள் கொண்டாடும் தீவிர ரசிகர் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 December 2024

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள் கொண்டாடும் தீவிர ரசிகர் :



நடிகை சில்க் ஸ்மிதாவின் 65வது பிறந்தநாளை யொட்டி, ஈரோட்டில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் பெண்களுக்கு புடவைகள் வழங்கியும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும் கொண்டாடினர். ஈரோடு அகில்மேடு வீதியில் டீக்கடை நடத்தி வருபவர் குமார். இவர், 1980ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர். இவர், ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும் புத்தாடை வழங்கியும் வருகிறார்.



இதன்படி இன்று, நடிகை சில்க் ஸ்மிதாவின் 65வது பிறந்தநாளை யொட்டி அவரின் தீவிர ரசிகரான குமார் தனது கடையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் உருவப் படத்தினை மலர்களால் அலங்கரித்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதனை தொடர்ந்து நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை யொட்டி பெண்களுக்கு புடவைகள் வழங்கியும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து குமார் கூறுகையில், தான் இவ்வாறு கடந்த 21 ஆண்டுகளாக செய்து வருவதாகவும், நடிகை சில்க் ஸ்மிதா மனிதநேயம் மிக்கவர். அவரை போலவே இல்லாதவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியை தான் செய்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக நடிகை சில்க் ஸ்மிதா புகைப்படம் இடம்பெற்ற 2025ம் ஆண்டுக்கான காலண்டரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார் குமார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம் , ஈரோடு.

No comments:

Post a Comment