வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் ஒத்திவைப்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 December 2024

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் ஒத்திவைப்பு :


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏற்கனவே அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளான மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புதல், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு பணி நெருக்கடி அளிப்பதை தவிர்த்திட வேண்டும். சிறப்பு பணிகள் மற்றும் சான்றிதழ் பணிக்கு வட்டம் தோறும் கூடுதல் துணை வட்டாட்சியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தி ஈரோட்டில் கடந்த 26 ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர். நிலையில் 15 மாவட்டங்களில் புயல் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் வருவாய்த்துறை நிதித்துறை அமைச்சர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது புயல் மழை காரணமாக பொதுமக்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்வதை கணக்கில் கொண்டு தற்காலிகமாக 30 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.


இதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக ஈரோட்டில் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

No comments:

Post a Comment