அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஈரோட்டில் விசிக ரயில் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின் போது, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய
அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து,
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள்
கட்சியினர் நேற்று (டிசம்பர் 20)
ரயில் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர். போராட்டத்திற்கு
மாநகர மாவட்ட செயலாளர் சாதிக்
தலைமை தாங்கினார். அப்போது,
அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய
அமித்ஷா பதவி விலக வேண்டும்
என கோஷமிட்டு, பிரதமர் மோடி
மற்றும் அமித்ஷாவின் புகைப்படத்தை
கிழித்து தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தினர்.
மேலும், ஈரோடு ரயில் நிலையம் 4வது வழித்தடத்தில், ஈரோட்டிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு ரயில்வே போலீசார் மற்றும் ஈரோடு தெற்கு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment