கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் வேதியியல் பாட ஆசிரியராக கோபியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகனிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஸ்ரீ முருகன் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சந்திரசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ. கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment