ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 3ம் வாரமாக, கார்த்திகை சோமவார ருத்ரயாகம் நடந்தது. கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில், அனைத்து சிவாலயங்களிலும் ருத்ரயாகம் நடப்பது வழக்கம். அதன்படி, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 3ம் வாரமாக, கார்த்திகை சோமவார ருத்ரயாகம், நேற்று நடந்தது. இதில், உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, கல்வி, கேள்வி ஞானத்தில், குழந்தைகள் சிறந்து விளங்கவும், முன்னோர் சாபம் நீங்கவும் இந்த யாகம் நடந்தது. யாகத்தில், 108 மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கினர். தொடர்ந்து, வருணாம்பிகை சமேத, ஆருத்ர கபாலீஸ்வரர், கோவில் பிரகாரத்தை, 5 முறை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment