சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் நைஜீரிய வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் செல்போன் எண்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர்.
இதில் பெருந்துறை ஈ. பி. நகரில் வசிக்கும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜான் சிபுக்கின் (25) என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி பெருந்துறை போலீசார் நைஜீரியா வாலிபரான சிபுக்கினை பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
-ஜான் சிபுக் 2022-ல் ஓராண்டு விசா பெற்று இந்தியா வந்தார். திருப்பூர் காதர் பேட்டை பகுதி பஜாரில் பனியன் துணிகளை வாங்கி நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். பெருந்துறையில் வீடு எடுத்து 2 ஆண்டுகளாக தங்கி உள்ளார்.
வரும் 2025 பிப்ரவரி வரை விசா காலவரம்பை நீட்டித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு குறித்தும் விசாரித்தோம். இதில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லாததால் அவரை விட்டுவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி.
No comments:
Post a Comment