சென்னை தலைமை செயலகத்தில் ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்ற திட்டம் என்ற சர்வதேச கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்க செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 1 ஆசிரியர் ஆகியோர் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்...
உடன் பள்ளி கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.சந்திரமோகன் இ.ஆ.ப, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:
Post a Comment