ஈரோடு கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவி எஸ்.கனிஷ்கா ஜப்பான் சென்றுள்ளார் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 May 2026

ஈரோடு கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவி எஸ்.கனிஷ்கா ஜப்பான் சென்றுள்ளார்



         ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.கனிஷ்கா தென்னிந்திய அறிவியல் கண்காட்சி மற்றும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்துள்ளார் அதன் மூலம் சகுரா சாயின்ஸ் உயர்நிலைப்பள்ளி திட்டம் - 2026 மூலம் ஜப்பான் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனம் சார்பில் நடைபெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து 4 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

அதில் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.கனிஷ்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது...

மாணவி எஸ்.கனிஷ்காவின் இந்த சாதனைக்கு தலைமை ஆசிரியர் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்...

மே 24 முதல் 30 வரை ஜப்பானில் நடைபெறும் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் மாணவி எஸ்.கனிஷ்கா பங்கேற்க உள்ளார்...


தமிழர் குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment